தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக நடிகர் மோகன் ரீ என்ட்ரி..! BTS போட்டோவுடன் வெளிவந்த செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் 'ஹரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

Shooting of Silver jubilee star Mohan's comeback film 'Hara'
Advertising
>
Advertising

இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துகொண்டார்.

Shooting of Silver jubilee star Mohan's comeback film 'Hara'

சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை குழுவினர் தொடருவார்கள். இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும். இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். 

 

Tags : Hara, Mohan, Kushboo

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shooting of Silver jubilee star Mohan's comeback film 'Hara'

People looking for online information on Hara, Kushboo, Mohan will find this news story useful.