கன்னட படமான கே.ஜி.எப் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று கொண்டாடப்படும் யஷ் இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார். கே ஜி எஃப் 2 படத்தின் மோஷன் பிச்சரை யஷ் பிறந்த நாளன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த இந்தப் படம் கோடிக்கணக்கில் வசூலித்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் படப்பிடிப்பு முடங்கியது. தற்போது லாக்டவுன் நிலை சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் தொடரவுள்ளது.
கேஜிஎஃப் 2 படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடக்கிறது, 22 நாட்கள் கடைசிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், ஷூட்டிங் தொடங்கிவிட்டால் விறுவிறுப்பாக படமாக்கம் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜூன் மாத தொடக்கத்தில் அரசாங்க அனுமதியின்படி படப்பிடிப்பு நடத்தப்பட்டால், ஏற்கனவே முடிவு செய்தபடி செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட்டுவிடலாம் என படக்குழுவினர் நம்பிக்கையாக உள்ளனர்.
இந்தச் செய்தி நிச்சயம் கேஜிஎஃப் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.