500க்கும் மேற்பட்ட படங்கள்… பழம்பெரும் நடிகை ’ரங்கம்மா பாட்டி’ மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரான ரங்கம்மா பாட்டி இயற்கை எய்தியுள்ளார்.

Advertising
>
Advertising

எம்ஜிஆர் சிவாஜி முதல் வடிவேலு  வரை…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரங்கம்மா பாட்டி, 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். எம் ஜி ஆர் நடித்த விவசாயி படத்தில் இவர் அறிமுகமானார். அதையடுத்து சிவாஜி உள்ளிட்ட பல தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களோடு பல படங்களில்  நடித்துள்ளார். வடிவேலுவுடன் இவர் நடித்த சில நகைச்சுவை காட்சிகள் பரவலானக் கவனத்தைப் பெற்றன.

கவனம் ஈர்த்த குறும்படம்…

குட்டிம்மா என்ற குறும்படத்தில் இவர் நடித்த போது அவரின் கதாபாத்திரம் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. அதையடுத்து இவர் குட்டிம்மா பாட்டி என்றும் அழைக்கப்பட்டு வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் மற்றும் இந்தியில் கூட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

உடல்நலப் பாதிப்பு…

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சொந்த ஊராகக் கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சொந்த ஊரிலேயே வசித்து வந்த அவரைப் பற்றியும் உடல்நலம் பற்றியும் செய்திகள் சமூகவலைதளங்களில் பரவி  வந்தன. இந்நிலையில் இன்று அவர் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 87. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த அவருக்கு ரசிகர்கள் தங்கள் அஞ்சலிகளை சமூகவலைதளங்கள் மூலமாக செலுத்தி வருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

500க்கும் மேற்பட்ட படங்கள்… பழம்பெரும் நடிகை ’ரங்கம்மா பாட்டி’ மரணம்… ரசிகர்கள் அஞ்சலி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shocking Senior tamil Actress Rangamma died today

People looking for online information on Death, Rangamma, Vadivelu will find this news story useful.