"வாரிசு பத்தி எதுவும் தெரியாது".. பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ஷோபா பேட்டி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பிறகு அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த ஷோபா சந்திரசேகர், சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக வாரிசு ஃபேமிலி செண்டிமெண்ட் படம், அடுத்த தளபதி 67 என்ன மாதிரியான படம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷோபா,  "வாரிசு படம் வெற்றி பெற வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வாரிசு படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. வாரிசு, ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்பது மட்டும் தெரியும். அடுத்த படம் குறித்து எதுவும் தெரியாது". என ஷோபா சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shobha Chandrasekhar Visit Kanchipuram Kamatchi Amman Temple

People looking for online information on SAC, Shobha SAC, Varisu, Vijay, Vijay Amma, Vijay Appa will find this news story useful.