"மருமகள் கூட முன்னாடிலாம் SHOPPING போவேன், ஆனா இப்போலாம்..".. மனம் திறந்த ஷோபா.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில், இதற்கு முன்பு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்திலும் விஜய் நடித்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

நடிகர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்கள் நடித்து புகழ் பெற்றதன் மூலம் சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் விஜய்.

அதே போல, விஜய்யின் தாயார் ஷோபாவும் பாடகியாக வலம் வருகிறார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

திரைப்படம் இயக்க ஆசை

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது Behindwoods சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது மருமகளும், விஜய்யின் மனைவியுமான சங்கீதா குறித்தும் நிறைய விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் ஷோபா சந்திரசேகர்.

அது மட்டுமில்லாமல், தான் திரைப்படங்கள் இயக்கி உள்ளது பற்றியும், கணவர் மற்றும் இயக்குனர் S.A. சந்திரசேகருடன் ஸ்க்ரிப்ட் டிஸ்கஷனில் இருந்தது பற்றியும் நிறைய விஷயங்களை பேசி இருந்த ஷோபா, விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை குறித்தும், விஜய்க்கு அம்மாவாக திரைப்படத்தில் தோன்ற வேண்டும் என்பது பற்றியும் நிறைய பேசி இருந்தார்.

மருமகள் கூட ஷாப்பிங் போவீங்களா?

அதேபோல நடிகர் விஜய்யின் மனைவியும் தன்னுடைய மருமகளுமான சங்கீதாவுடனான உறவு குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்தார். "உங்களுக்கும் உங்களுடைய மருமகளுக்குமான ரிலேஷன்ஷிப் எப்படி?. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு போறது, ஷாப்பிங் போறது எல்லாம் பண்ணுவீங்களா?" என கேட்கிறார்.

Images are subject to © copyright to their respective owners

இதற்கு பதில் சொல்லும் ஷோபா, "எல்லாம் பண்ணோம், பண்ணிட்டு இருந்தோம் ஒரு காலத்துல. இப்ப பசங்க எல்லாம் வளர்ந்து அதோட Routine எல்லாம் மாறுனதுக்கப்புறம்  இந்த மாதிரி போறது எல்லாம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. இப்ப எல்லாம் வெளியே போனால் சீக்கிரமா கண்டுபிடிச்சுடுறாங்க. முன்னாடி எல்லாம் பாம்பே எல்லாம் போய் நிறைய ஷாப்பிங் பண்ணி இருக்கோம்.

படம் பார்க்குறது இப்படித்தான்..

அதே மாதிரி படத்துக்கு கீதா முதல்ல பாத்துட்டு வருவா. அதுக்கப்புறம் மேட்னி ஷோக்கு நான் போவேன். இதுதான் விஜயோட ஒவ்வொரு மூவிக்கும் நாங்க பண்றது. ஒரு சேஃப்ட்டிக்காக தான் அப்படி பண்றது. இப்ப எல்லாம் போட்டோஸ் எடுத்துடறாங்க. அது கொஞ்சம் கஷ்டமா இருக்கு நம்மளுக்கு" என தெரிவித்தார்.

"மருமகள் கூட முன்னாடிலாம் SHOPPING போவேன், ஆனா இப்போலாம்..".. மனம் திறந்த ஷோபா.. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shoba Chandrasekhar about shopping and movies with sangeetha

People looking for online information on Sangeetha, Shoba Chandrasekhar, Vijay will find this news story useful.