தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Also Read | "வாரிசு படத்தோட Goosebump தருணம்".. திரை தீப்பிடிக்கும் 🔥 .. எதிர்பார்ப்பை எகிற வைத்த ராஷ்மிகா
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் விஜே பார்வதி மற்றும் Behindwoods-ன் விஜே ஷோபனா ஆகியோர் வந்திருக்கின்றனர். போட்டியாளர்களுடன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஷிவின் அங்கு வருகிறார்.
முன்னதாக, ஒவ்வொரு போட்டியாளரையும் விஜே இருவரும் நேர்காணல் செய்கின்றனர். அப்போது அவரைப்பற்றி சமூக ஊடகங்களில் ட்ரெண்டில் இருக்கும் ஹேஷ்டாக்குகள் என்ன என்பது சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஷிவின் கார்டன் பகுதிக்கு வருகிறார். அங்கு பார்வதி மற்றும் போட்டியாளர்கள் அமர்ந்து உள்ளனர். அப்போது, ஷிவினுக்கு வழங்கப்பட்ட ஹேஷ்டாக்ஸ் பற்றி போட்டியாளர்கள் கேட்கின்றனர். இதற்கு பதில் அளிக்கும் ஷிவின்,"ஷிவின் சுப்ரீமஸி (Shivin Supremacy) மற்றும் பவர் கப்பிள் விக்கு அன்ட் ஷிவின் (power couple viku and shivin)" எனச் சொல்லி சிரிக்கிறார்.
இதனை கேட்டு விக்ரமன் முகத்தை மூடியபடி சிரிக்க, சக போட்டியாளர்கள் ஆராவாரம் செய்கின்றனர். அப்போது அசீம்,"ஓ, இதெல்லாம் வெளில வைரலாகுற ஹேஷ்டாக்ஸ் போல. இந்த விஷயம் வெளியுலகத்துக்கும் தெரிஞ்சிடுச்சா" என சிரிக்கிறார். இதனை கேட்டு சக போட்டியாளர்களும் சிரிக்கின்றனர்.
Also Read | வாரிசு படம் பார்த்து விட்டு.. தளபதி 67 Update கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. Varisu!!