பிக்பாஸ் வீட்டில் தற்போது ராபர்ட் மாஸ்டரிடம் ஜாலியாக ஷிவின் குறிப்பிட்ட விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் கவனத்தை பெற்று வருகிறது.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக தமிழில் பிக்பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது.
வழக்கம் போல கலகலப்பாக தொடங்கிய பிக்பாஸ், பின்னர் வழக்கம் போல டாஸ்குகள் உள்ளிட்ட விஷயங்களால் சூடு பிடிக்க தொடங்கி இருந்தது.
அதிலும் கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் பெரிய கலவரத்தை தான் உண்டு பண்ணி இருந்தது. பொம்மை டாஸ்க்கில் ஷெரினா கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருந்தது, போட்டியாளர்களுடன் சண்டை போட்ட அசீம் உள்ளிட்ட பல பரபரப்பான் சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி இருந்தது.
இவை அனைத்திற்கும் சமீபத்திய எபிசோடுகளில் விளக்கமளித்து போட்டியாளர்களிடம் கலந்துரையாடி இருந்தார் கமல்ஹாசன். அதே போல, அசல் கோலாரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல இயங்கி வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், ராபர்ட் மாஸ்டரை ஜாலியாக ஷிவின் மாஸ்டர் கலாய்த்தது தொடர்பான விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. வீட்டிற்கு வெளியே இருக்கும் போது, ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் ஷிவினிடம் எதையோ கேட்பதாக தெரிகிறது.
அப்போது பேசும் ஷிவின், "எல்லாம் தெரிஞ்சுக்கணும்ல. என்ன குடிக்குறா?, எங்க போறா?. செருப்பை மறந்துட்டாளா?. செருப்பை வெச்சுட்டாளா. என்ன ட்ரஸ் போடுறா. மூக்குத்தி போட்டாளா. பொட்டு வெச்சாளா. அவளே அவளை பத்தி இவ்ளோ யோசிச்சிருக்க மாட்டா" என ஷிவின் கூறியதும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் அவரது அருகில் இருந்த அமுதவாணன் ஆகியோர் சிரிக்கவும் தொடங்கினர்.
மறுபக்கம் இதனைக் கவனித்து கொண்டிருந்த ரச்சிதா, ஷிவினிடம் "ஏன்டி, ஏன்டி" என்றும் சிரித்துக் கொண்டே குறிப்பிடுகிறார். ரச்சிதாவை குறிப்பிட்டு ராபர்ட் மாஸ்டரிடம் ஷிவின் பேசும் விஷயம் தொடர்பான விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.