தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கார்டன் பகுதியில் மைனா மற்றும் ஷிவின் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஷிவின்,"ஆபிஸ்ல வேலை பார்க்கும்போது, மறைச்சு மறைச்சு பிக்பாஸ் பார்ப்பேன். ஏன்னா எங்க ஆபிஸ்ல போன் அனுமதி கிடையாது. அப்படி ரசிகையா இருந்துட்டு இந்த ஸ்டேஜ்க்கு வர்றது பெரிய விஷயம். எப்போதுமே தனா கிட்ட சொல்லுவேன். யாருவேனா இங்க இருந்து போறேன்னு சொல்லலாம். ஆனா, நீயோ நானோ அப்படி சொல்ல முடியாது. சாதாரண இடத்துல இருந்து இங்க வந்திருக்கோம். செலிபிரிட்டி கூட இங்க வர விருப்பப்படுறாங்க. அவங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைச்சிருக்கு-னு சொல்லிருக்கேன். எங்க 2 பேருக்கும் ஒரே கனவு, ஒரே ஏக்கம் இருந்துச்சு. அதுனால அவ வெளியே போனது எனக்கு வருத்தமா இருந்துச்சு. அந்த வாரம் நான்தான் அவளை நாமினேட் பண்ணேன். இருந்தாலும் அவ போனது வருத்தமா இருந்தது" என்கிறார்.
இதனை நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த மைனா," இந்த வீட்டுல இருந்து போனவங்கள்ல இங்கேயே அவங்க இருந்திருக்கலாம்-னு எனக்கு தோனியது 2 பேர். மணியும் தனாவும் தான் . ஏன்னா ரெண்டு பேருமே ஃபிசிக்கலா செம்ம tough கொடுத்தாங்க" என்கிறார்.
Also Read | என்ன Prank-லாம் பண்றாங்க.. சீரியஸா ஓடிவந்த ஹவுஸ் மேட்ஸ்.. ஆனாலும் மைனாவுக்கு குசும்பு தாங்க..😂