முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சென்றிருந்தது.
Image Credit : Vijay Televsison
மக்களையும் வெகுவாக கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய 21 போட்டியாளர்களும் ஏராளமானவர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தனர். சண்டை, கலகலப்பு, வாக்குவாதங்கள் என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். இறுதியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
இதில் முதல் வாரத்தில் இருந்து ஷிவினுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஃப்ரீஸ் டாஸ்க்கில் தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வரவில்லை என ஷிவின் கண்ணீர் விட்டிருந்தது பெரிய அளவில் பலரையும் கலங்க வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ரச்சிதா, விக்ரமன் உள்ளிட்ட பலரின் பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது அவர்கள் ஷிவினை தங்களின் மகள் போல பாவித்து பேசியிருந்ததும் மனம் நெகிழ வைத்திருந்தது.
தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் கூட அவர் செல்லும் இடத்தில் தாய்மார்கள் ஆதரவும் சிறப்பாக இருந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஷிவினுக்கு கிடைத்த கௌரவம் தொடர்பான விஷயம் அவரை கண்ணீரில் கலங்க வைத்துள்ளது.
Image Credit : Vijay Televsison
பொதுவாக பிக் பாஸ் சீசன் முடிந்ததுமே விஜய் டிவியில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். ஆறாவது பிக்பாஸ் சீசனுக்கான பிக் பாஸ் கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஒளிபரப்பாக உள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள ப்ரோமோ காட்சிகளில், தாயாரின் அரவணைப்புக்காக ஏங்கிய ஷிவினுக்காக சுமார் தாய்மார்கள் வரை கலந்து கொண்டிருந்தனர்.
Image Credit : Vijay Televsison
அவர்கள் அனைவரும் ஷிவினை கட்டியணைத்து தாய் பாசத்தை பொழிந்ததுடன் மட்டுமில்லாமல், "நீங்க கவலைப்படாதீங்க நாங்க எல்லாருமே உங்களுக்கு அம்மா தான் ", "எங்க வீட்டு பொண்ணா மட்டுமில்ல, எங்க வீட்டு மகாலட்சுமியா உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்ற உருக்கமான கருத்துக்களை கூறவே அதனை கேட்டு ஷிவின் கண்கலங்குவதும் தெரிகிறது.
Image Credit : Vijay Televsison
"இங்க எல்லாரும் என்னோட அம்மாவா வரல. என்ன மாதிரி இருக்கிற எல்லோரோட அம்மாவா வந்திருக்கீங்க. அதுதான் இந்த சமூகத்துக்கு தேவை" என்ன கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.