"நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க ஷிவின்".. பங்கமாக கலாய்த்த விக்ரமன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் Finale குறித்து பேசி வருகின்றனர்.

Shivin comment on Vikraman Coffee Making in BiggBoss
Advertising
>
Advertising

Also Read | “தம்பி நீ படிக்கிற பையன்”.. கலாய்த்த அமுதுவுக்கு விக்ரமனின் Thug Life பதில்.!

முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர். இதனையடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டியாளர்களில் யாரேனும் பணப்பெட்டியுடன் வெளியேறுவார்களா? என ரசிகர்கள் பரபரப்புடன் சமூக வலை தளங்களில் பேசி வருகின்றனர்.

Shivin comment on Vikraman Coffee Making in BiggBoss

பிக்பாஸ் போட்டியானது இன்னும் சில நாட்களில் முடிவடையும் என தெரிகிறது. இதனையடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சக போட்டியாளர்கள் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர். இதனிடையே போட்டியாளர்களுக்குள் ஜாலியான வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஷிவின் - விக்ரமன் இடையே வேடிக்கையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வீட்டினுள் ஷிவினுக்காக காபி போட்டு கொண்டுபோய் கொடுக்கிறார் விக்ரமன். அப்போது காபி குறித்து ஷிவின் கலாய்க்கிறார்.

அப்போது பேசும் விக்ரமன்,"எந்த உழைப்புக்கும் பலன் இல்லைன்னா அந்த உழைப்பு வீணாகிடும்" என சொல்ல தான் பாராட்டியதாக ஷிவின் சொல்கிறார். தொடர்ந்து பேசும் விக்ரமன்,"உங்களுக்கு எவ்வளவு முறை காபி போட்டு கொடுத்திருக்கேன்? எத்தனை தடவை என்னை இன்சல்ட் பண்ணிருக்கீங்க" என புன்னகையுடன் சொல்கிறார். அதற்கு பதில் சொல்லிய ஷிவின்,"106 நாள் வீட்டுக்குள்ள இருந்திருக்கீங்க. எவ்வளவு முறை காபி போட்டு கொடுத்திருக்கீங்க. ஒரு தடவையாவது அது காபி மாதிரி இருந்திருக்கா?" என சிரித்தபடி கேட்கிறார்.

அப்போது விக்ரமன்,"நாக்குல நரம்பு இல்லாம பேசுறீங்க ஷிவின்" எனச்சொல்ல "நீங்க போட்டுக்கொடுக்குற காபியை குடிக்கிறதுக்கு நாக்குல நரம்பு இல்லாம இருக்கதே பெட்டர்" என்கிறார் ஷிவின். தொடர்ந்து பேசும் விக்ரமன் "மையை வச்சு நாக்குல நரம்பு வரைஞ்சுக்கங்க" என சொல்கிறார்.

இதனை கேட்ட ஷிவின்,"இருந்தாலும் நீங்க கஷ்டப்பட கூடாதுனு உங்ககிட்டயே காபி கேக்குறேன்-ல அப்போ என் தாராள மனசை புரிஞ்சுக்கங்க" என சொல்ல, "அவ்வளவு பெரிய சோம்பேறி நீங்க ஷிவின். ஒருத்தனுக்கு காபி போட தெரியலைன்னு சொல்லிட்டு மறுபடியும் அவங்ககிட்டயே காபி கேக்குறீங்களே, நீங்க சரியான சோம்பேறி ஷிவின் நீங்க" என சிரித்தபடியே சொல்கிறார் விக்ரமன்.

Also Read | 'வாத்தி' விக்ரமனையே கண்கலங்க வச்சுட்டாங்கப்பா.. பிக்பாஸ் சொன்ன நெகிழ வைக்கும் விஷயம்..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shivin comment on Vikraman Coffee Making in BiggBoss

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shivin, Vikraman will find this news story useful.