ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்க ஷிவின் எழுந்துவிடுகிறார். அமுதவாணன் மற்றும் ரச்சிதா ஆகியோரிடம் "வாங்க நம்ம ரேங்கிங் டாஸ்க் விளையாடலாம். எனக்கு போர் அடிக்குது" என்கிறார் ஷிவின். தொடர்ந்து "எழுப்பி விட்டுடுவோமா?" எனக் கேட்கும் ஷிவின் தலையணையை தூக்கி வீசுகிறார். அது, அமுதவாணனின் அருகில் படுத்திருந்த விக்ரமன் கட்டிலில் விழுகிறது.
அதனை எடுக்க அமுதவாணன் நைசாக செல்லும்போது, விக்ரமன் எழுந்துவிடுகிறார். அப்போது உடனடியாக அமுது மற்றும் ஷிவின் படுத்து தூங்குவது போல நடிக்கின்றனர். ஆனாலும், ஷிவினால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து, இருவரும் எழுந்து அமர்கின்றனர். பின்னர் அமுதவாணன் அங்கிருந்து நடந்து செல்கிறார். மீண்டும் படுத்துக்கொண்ட விக்ரமனிடம் "வாங்க டாஸ்க் விளையாடலாம்" என்கிறார் ஷிவின். இதனை கண்டு ரச்சிதா சிரித்துக்கொண்டிருக்கிறார்.