"நான் பேசுனது தப்பா PORTRAY ஆகியிருந்தா".. BIGG BOSS வீட்டில் உருவான சர்ச்சை?.. மன்னிப்பு கேட்ட ஷிவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிகவும் அமோகமாக நடந்து முடிந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். அதில், மக்கள் மத்தியில் பிரபலமான பலர் இருந்த சூழலில், அதிக அறிமுகம் இல்லாத ஷிவின் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். தான் பேசும் விஷயத்தில் நிலையாக இருக்கும் ஷிவின், யாராக இருந்தாலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக பேசக்.கூடியவர்.

இதனால், ஷிவினுக்கு ரசிகர்கள் அதிகரித்ததுடன் மட்டுமில்லாமல், Freeze டாஸ்க்கில் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் தங்களின் மகள் என குறிப்பிட்டு பேசி இருந்ததும் அவரை மனம் நெகிழ வைத்திருந்தது. இதற்கிடையில், பிக் பாஸ் 6 ஆவது சீசனில் Finale வரை முன்னேறி இருந்த ஷிவின், 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தற்போது வெளியே வந்துள்ள ஷிவினுக்கு மக்கள் ஆதரவும் அற்புதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை ஷிவின் பகிர்ந்து கொண்டார்.

Images are subject to © copyright to their respective owners

பிக் பாஸ் வீட்டிற்குள் Foul Language அதிகம் ஷிவின் பயன்படுத்தியதாகவும், அதிகம் பேர் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து அதில் வரும் போட்டியாளர்களை பின்பற்ற மக்கள் இருக்கும் போது அதனை தவிர்த்து இருக்கலாமே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஷிவின், "தவிர்த்து இருக்கலாம். ஆனால், என்னை நான் போலியாக காட்ட வேணாம்ன்னு நெனச்சேன். அதை தவிர்த்து நான் என்ன பண்ண போறேன். ஏன்னா, எல்லாரும் அப்படி தானே இருக்காங்க. எனக்கு புரியுது, ஒரு டிவில இருக்குறது எவ்ளோ பெரிய Responsibility ன்னு எனக்கு தெரியுது. நீங்க சொல்றத நான் ஃபீல் பண்ணி இருக்கேன். ஆனா, அதை தாண்டி ஒரு டிவில இருக்கேன்னு நெனச்சிட்டு பண்ணேன்னா, என்ன நேச்சுரலா என்னால Expose பண்ணி இருக்க முடியாது.

Images are subject to © copyright to their respective owners

எல்லா விஷயமும் நான் Conscious - ஆ பண்ற மாதிரி தான் இருந்துருக்கும். உண்மையா அவ்ளோ தூரம் நான் யோசிக்கவும் இல்லை. ஜாலியா வீட்டுல, ரூம்ல எப்படி இருப்போமோ அந்த மாதிரி இருந்துட்டு வந்துட்டேன். அதான் உண்மை. அதுனால யாருக்காவது Hurt ஆகி இருந்தா, யாருக்காவது அது ஒரு தப்பான விஷயமா Portray ஆகி இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த இடத்துல நான் எல்லாருக்கும் ஸாரி சொல்லிக்குறேன்" என தெரிவித்தார்.

"நான் பேசுனது தப்பா PORTRAY ஆகியிருந்தா".. BIGG BOSS வீட்டில் உருவான சர்ச்சை?.. மன்னிப்பு கேட்ட ஷிவின் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shivin about her words used inside bigg boss house

People looking for online information on Bigg Boss Tamil 6, Shivin will find this news story useful.