"என்கிட்ட இல்லன்னு சொல்லிட்டு, கமல் சார்கிட்ட ஆமான்னு சொன்னதும்".. அசிம் பேச்சால் அதிர்ந்த SHIVIN

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிகவும் அமோகமாக நடந்து முடிந்திருந்தது.

Advertising
>
Advertising

Image Credit :  vijay television

Also Read | சிம்பு பிறந்தநாளுக்கு A.R. ரஹ்மானின் ட்ரீட்.. 'பத்து தல' 1st சிங்கிள் 'நம்ம சத்தம்' ரிலீஸ்!

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். அதில், மக்கள் மத்தியில் பிரபலமான பலர் இருந்த சூழலில், அதிக அறிமுகம் இல்லாத ஷிவின் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். தான் பேசும் விஷயத்தில் நிலையாக இருக்கும் ஷிவின், யாராக இருந்தாலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக பேசக்.கூடியவர்.

இதனால், ஷிவினுக்கு ரசிகர்கள் அதிகரித்ததுடன் மட்டுமில்லாமல், Freeze டாஸ்க்கில் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் தங்களின் மகள் என குறிப்பிட்டு பேசி இருந்ததும் அவரை மனம் நெகிழ வைத்திருந்தது. இதற்கிடையில், பிக் பாஸ் 6 ஆவது சீசனில் Finale வரை முன்னேறி இருந்த ஷிவின், 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.

Image Credit :  vijay television

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தற்போது வெளியே வந்துள்ள ஷிவினுக்கு மக்கள் ஆதரவும் அற்புதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை ஷிவின் பகிர்ந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் அசிம் ஷிவினை Body Shaming செய்தாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷிவின், "அந்த டைம்ல நானும் அசிமும் ஜெயில்ல இருந்தோம். அப்ப அவருகிட்ட இதப்பத்தி கேட்டேன், நோக்கத்தோட பண்ணீங்களா இல்லையான்னு. அப்போ அசிம் இல்லன்னு சொன்னாரு. வெளிய வந்துட்டு கமல் சார் எபிசோடுல அவரே அதே பண்ணேன்னு சொன்னாரு.

எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு. நான் கேக்குறப்போ இல்லன்னு சொல்லிட்டு இப்ப வந்து ஸாரி சொல்றாருங்குற மாதிரி இருந்துச்சு. ரெண்டு, மூணு தடவ டான்ஸ் ஆடி இமிடேட் பண்ணாரு. அவரு Agree பண்றதுல எனக்கே டவுட்டு வருது. ஒரு வேளை நோக்கத்தோட தான் பண்ணாரா அப்படின்னு. அதையும் தாண்டி ஒரு ஆளோட பாடி லாங்குவேஜ்ஜை இமிடேட் பண்றது தப்பு தானே.

நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை பேசுறப்போ, நீங்க பதில் சொல்ல முடிஞ்சா பதில் சொல்லணும். அத விட்டுட்டு, இந்த மாதிரி Mock பண்ணிட்டு போறது, ஒரு ஆரோக்கியமான Arguement ஆ இருக்காதுல்ல. உங்ககிட்ட பதில் இல்லன்னு தெரியுறப்போ இந்த மாதிரி இமிடேட் பண்றது, Mock பண்றது, Personality அ அட்டாக் பண்றது, இதெல்லாம் அவருகிட்ட பதில் இல்லாதனால இது எல்லாம் பண்ணாரோன்னு தோணுச்சு" என அசிம் குறித்து ஷிவின் தெரிவித்தார்.

Also Read | அஜித்குமாரின் 'துணிவு'.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OTT- ரிலீஸ் எப்போ? எதுல? முழு விவரம்

"என்கிட்ட இல்லன்னு சொல்லிட்டு, கமல் சார்கிட்ட ஆமான்னு சொன்னதும்".. அசிம் பேச்சால் அதிர்ந்த SHIVIN வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shivin about Azeem speech in front of Kamal Haasan exclusive

People looking for online information on Azeem, Kamal Haasan, Shivin, Shivin about Azeem speech will find this news story useful.