நேற்று பிக்பாஸ் வீட்டில் ஜோடி டான்ஸ் மற்றும் பந்தை பவுலுக்குள் போடும் டாஸ்க் நிகழ்ந்தது. ஜோடி டான்ஸில் ஆஜித்-கேப்ரியலா, ரியோ-நிஷா, அனிதா-சுரேஷ், வேல்முருகன்-சனம் ஷெட்டி ஜோடிகளாக டான்ஸ் ஆடி சக போட்டியாளர்களையும் ஆட வைத்தனர். தொடர்ந்து பந்து டாஸ்க் நிகழ்ந்தது.இது முடிந்ததும் கும்பல், கும்பலாக போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து பந்து டாஸ்க் குறித்து பேசினர்.
சுரேஷ் தலைமையில் ஷிவானி, ரம்யா, சம்யுக்தா அமர்ந்து அந்த டாஸ்க்கின் நிறை-குறைகளை அலசி, ஆராய்ந்தனர். அதேபோல ஆஜித்-கேப்ரியலா, பாலாஜி மூவரும் அமர்ந்து பந்து டாஸ்க் குறித்து பேசினர். இதில் பாலாஜி, ஷிவானியை இஷ்டத்துக்கு கிண்டல் அடிக்க, பிக்பாஸ் சரியாக கேமராவில் ஷிவானியை காட்டி புரியாதவர்களுக்கும் விளக்கினார். இந்த நிலையில் டாஸ்க்கின் போது ஏன் பாலாஜியை வெளியே அனுப்பினேன் என்பதற்கு ஷிவானி விளக்கம் அளித்தார். அப்போது அடுத்த வாரம் தான் கண்டிப்பாக பாலாஜியை நாமினேட் செய்வேன் என தெரிவித்தார்.
கடந்த வாரம் ஷிவானி-பாலாஜி இரவு முழுவதும் வாக்கிங் சென்றதை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனோட லவ் ஜோடி இவங்கதான் என கருத்து தெரிவித்தனர். ஆனால் அப்படி எதுவும் நடப்பது போல தெரியவில்லை. வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும் பாலாஜி-ஷிவானி இடையில் ஏதோ உரசல் நிகழ்ந்துள்ளது போல தெரிகிறது. அதோடு ஷிவானி இந்த கேமை நன்றாக புரிந்து கொண்டு உள்ளே வந்திருப்பதால் இந்த காதல் விவகாரங்களில் அவர் சிக்க வாய்ப்பில்லை என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.