ஷிவானியிடம் 'கறார்' காட்டிய பிக்பாஸ்... 'மீம்' போட்டு கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக விஜே அர்ச்சனா வந்து இறங்கினார். இதனால் தற்போது ஆட்டம் மேலும் சூடுபிடித்து இருக்கிறது. கையோடு உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு விருதுகளை அளித்தார். இதில் அவரிடம் இருந்து விருது வாங்கிய ஷிவானி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தன்னுடைய இடத்தில் சென்று அமர்ந்தார்.

சக போட்டியாளர்கள் அந்த அட்டையை கழுத்தில் மாட்டியிருக்க ஷிவானி கையில் வைத்துக்கொண்டு ஹாயாக இருந்தார். இதைப்பார்த்த பிக்பாஸ் திடீரென ஷிவானி உங்க அட்டையை எடுத்து கழுத்துல மாட்டுங்க என கண்டிப்பான ஸ்கூல் பிரின்சிபல் போல உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸின் இந்த கண்டிப்பை பார்த்த ஷிவானி ஆர்மி, அந்த அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது என சமூக வலைதளங்களில் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அவருக்கு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என்னும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Narayanan got Atmosphere Artist Award in BB house

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.