இது நம்ம ஷிவானியோட ஜாலியோ ஜிம்கானா..! அதுவும் அந்த டான்ஸ் ஸ்டெப் வேற மாரி வேற மாரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடிகை ஷிவானி ஆடிய நடனம் வைரலாகி உள்ளது.

Advertising
>
Advertising

மீண்டும் இந்தியா முழுதும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் KGF முதல் பார்ட்.. முழு தியேட்டர் லிஸ்ட்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ஷிவானி ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். விஜய்யின் குதிரை ஸ்டெப்பை ஷிவானி தனக்கே உரிய பாணியில் ஆடி கவனம் ஈர்த்துள்ளார்.

தற்போது வடிவேலுவுக்கு ஜோடியாக  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். R J பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்திலும் நடிகை ஷிவானி நடிக்க உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஷிவானி VJS46 படத்தில் ஷிவானி விஜய் சேதுபதியுடன் போலிசாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் முன்பே நடிகை ஷிவானி நடித்து முடித்துள்ளார்.

 

மிகவும் கஷ்டமான உடற்பயிற்சி செய்த பிரபல நடிகை..பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே..!

 

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Narayanan Dancing Beast Jolly O Gymkhana Song

People looking for online information on Beast, Shivani Narayanan, Shivani Narayanan Dancing Jolly O Gymkhana Song, Vijay will find this news story useful.