ஷிவாங்கியையும் விட்டு வைக்காத தல அஜித் ரசிகர்கள்... தனியார் கல்லூரியில் ருசிகர சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது.

அதிலும் முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் அந்த வகையில் ஷிவாங்கி சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாட அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பொழுது குக் வித் கோமாளி பற்றியும், சூப்பர் சிங்கர் பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே மாணவர்கள் தங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவரது ஸ்டைல் ஜாலியாக பதிலளித்துள்ளார். அப்பொழுது அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் பற்றி கேட்க. அந்த சபையே சிரிப்பொலியால் நிரம்புகிறது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..!

ஷிவாங்கியையும் விட்டு வைக்காத தல அஜித் ரசிகர்கள்... தனியார் கல்லூரியில் ருசிகர சம்பவம்..! வீடியோ

Tags : Shivangi

Shivangi fun conversation with students ஷிவாங்கி மாணவர்களுடன் ஜாலி பேச்சு

People looking for online information on Shivangi will find this news story useful.