பிக்பாஸ் 3 டைட்டிலை யாரு வெல்லப் போகிறார்கள் என்பது குறித்து பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணியின் கனவர் சிவகுமார் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான நடிகர் சிவகுமார் சிங்கக்குட்டி, இதுவும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சுஜா வருணியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சிவகுமார் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இன்று அவர் பதிவிட்டுள்ள டிவிட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, முகென் ஒரு கறுப்புக்குதிரை என்றும் அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக்கொண்டு போகப்போகிறார் என்றும் என் இதயம் சொல்கிறது.