சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகை ஷிவானி ஆடிய நடனம் வைரலாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 120 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர். இந்த பட்டிலில் நடிகை ஷிவானி நாராயணனும் இடம் பிடித்துள்ளார். பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு செமயாக நடனம் ஆடி உள்ளார்.
தற்போது வடிவேலுவுக்கு ஜோடியாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். R J பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்திலும் நடிகை ஷிவானி நடிக்க உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஷிவானி VJS46 படத்தில் ஷிவானி விஜய் சேதுபதியுடன் போலிசாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் முன்பே நடிகை ஷிவானி நடித்து முடித்துள்ளார்.