அப்டி போடு.. “காசேதான் கடவுளடா” படத்தில் இந்த ‘அதிமுக்கிய’ கேரக்டரில் இவரா?.. செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிர்ச்சி சிவா - பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் நகைச்சுவை படத்தின் ரீமேக் படமான “காசேதான் கடவுளடா” படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Shiva, yogibabu, sivaangi, pugazh kasethan kadavulada wrap up

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன், சூப்பர் சிங்கர் சிவாங்கி, குக் வித் கோமாளி புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு N. கண்ணன் இசையமைக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் கண்ணன் உடைய Masala Pix நிறுவனம்,  MKRP Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, 2021 ஜூலை 16 அன்று துவங்கியது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 80% படம் முடிக்கப்பட்டுவிட்டது. இதற்காக படக்குழுவினருக்கு இயக்குநர் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

முத்துராமன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த கிளாசிக் ஹிட் படமான பழைய “காசேதான் கடவுளடா” படத்தின் ரீமேக் படம் தான் இது. பழைய படத்தில் முக்கிய மோசடி சாமியார் கெட்டப்பை தேங்காய் சீனிவாசன் போட்டிருப்பார். அந்த வேடத்தை, தற்போது இந்த ரீமேக் படத்தில், நடிகர் யோகிபாபு ஏற்றிருப்பார் என படத்தின் ஸ்டில்களைக் கொண்டு கணிக்க முடிகிறது.

இந்த படத்தின் டிரெயல்ர், இசை மற்றும் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Also Read: விபத்தில் சிக்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்!! .."அந்த Marriage காட்சி Shoot-க்கு வரும்போது".. viral post!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shiva, yogibabu, sivaangi, pugazh kasethan kadavulada wrap up

People looking for online information on KasethanKadavulada, Manobala, Masala Pix, Mirchi Shiva, Priya Anand, Pugazh, R Kannan, Sivaangi, Urvashi, Yogi Babu will find this news story useful.