ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பாகி வருகிறது.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தனது முன்னாள் மனைவி விவாகரத்து செய்தது பற்றிய கருத்தை அண்மையில் வெளியிட்டபோது அந்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதனிடையே இந்த வருடம் பிப்ரவரி மாதம் மும்பை கிரைம் பிராஞ்ச் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். அதன்படி இந்தியாவில் சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் வெளியிடப்படுவதும், ஒளிபரப்பாவதும், பார்க்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த வழக்கில்தான் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா சம்பந்தப் பட்டிருப்பதாகவும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் மும்பை போலீசார் , அவரை விசாரித்து வருவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் இது போன்ற படங்களில் நடித்த 9 நடிகைகளிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
ALSO READ: “இன்னொரு Deleted Kissing Scene-ம் இருக்கு”.. 'வாழ்' ஹீரோ.. ஹீரோயின் செம்ம fun Ride!
பிரபல நடிகை பூனம் பாண்டே, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தான் நடித்த படங்கள் குறிப்பிட்ட செயலிகள் மூலம் ஒளிபரப்பப் படுவதாக, ராஜ் குந்த்ரா மீதும், அவருடைய அசோசியேட்கள் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால் ராஜ் குந்த்ரா தரப்பு இவற்றையெல்லாம் மறுத்திருக்கிறது. இந்த நிலையில்தான் தொடர்ந்து மும்பை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.