இந்தியாவின் பாரம்பரியத்தை யோகா போன்ற தொன்மையான கலைகள் வழியாக உலகமே புரிந்து கொள்ளும் வகையில்தான் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு சர்வதேச யோக தினம் ஜூன் 21-ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகாவை தீவிரமாக செய்துவருபவர். தன் மகிழ்ச்சியான மனநலத்துக்கும் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்டான உடல்நலத்துக்கும் யோகாதான் காரணம் என்று தன்னுடைய சோஷியல் மீடியா பதிவுகளில் அடிக்கடி கூறி வருபவர் அவர்.
ஆரோக்கிய இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அவர் யோகா பயிற்சிகள் அளித்துவருகிறார். லாக்டவுன் காலகட்டத்தில் வீட்டில் குவாரண்டைன் ஆகியிருக்கும் நிலையில் யோகாசனங்கள் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஷேர் செய்தும் வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அவரது ஆரோக்கிய இந்தியா யூட்யூப் சேனலில் நேரலையில் வந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி தரவிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. யோகா பற்றிய முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு எளிமையாக சொல்லிக் தரப் போவதாக கூறியுள்ளார் ஷில்பா.
இந்நிகழ்ச்சியை விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் ஸ்போர்ஸ்ட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஸ்லோகம் ஒன்றை பற்றிய விளக்கம் அளித்துள்ளார்