"அழகான பரிசு".. விக்ரமனை சந்தித்து ஷெரினா கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். அனைவருமே ஒவ்வொரு விஷயத்தில் தனித்துவம் நிறைந்து விளங்கியதால் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக இருந்தது.

இறுதியில், 21 போட்டியாளர்களில் இருந்து அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய 3 பேர் Finale வுக்கு முன்னேறி இருந்தனர். இதில், அசிம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனின் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 2 ஆவது இடத்தை விக்ரமனும், 3 ஆவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் கடந்தும் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பலரும் நட்பு பாராட்டி இருந்ததையடுத்து தற்போது வெளியே கூட மாறி மாறி ஒருவரை ஒருவர் சந்தித்து வருவது தான். சமீபத்தில் ADK, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட போட்டியாளர்கள் சந்தித்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners

அதே போல, அசிம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ரீல்ஸ் வீடியோ ஒன்றும் அதிக கவனம் பெற்றிருந்தது. இப்படி அடிக்கடி பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்தும் வருகிறது. அந்த வகையில், விக்ரமனுக்கு ஷெரினா கொடுத்த கிஃப்ட் தொடர்பான பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது விக்ரமன் மற்றும் ஷெரினா ஆகியோரிடையேயான நட்பு அதிகமாக இருக்கவில்லை. ஆனால், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்த ஷெரினா, விக்ரமனுடன் நட்பாக பழகி இருந்தார். தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ள சூழலில், விக்ரமனை ஷெரினா சந்தித்துள்ளார். அத்துடன் ஒரு புத்தர் சிலையையும் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள விக்ரமன், "சமூக பொறுப்புள்ள ஒரு நண்பரிடம் இருந்து ஒரு அன்பான பரிசு. எனக்கு புத்தரை பரிசளித்ததற்கு நன்றி. உங்களது பார்வை பெரிய காரணத்திற்காக உள்ளது. அதற்காக எனது வாழ்த்துக்களும், ஆதரவும்" என குறிப்பிட்டுள்ளார்.
 

 

தொடர்புடைய இணைப்புகள்

Sherina Gift to Vikraman after bigg boss season 6

People looking for online information on Bigg boss 6 tamil, Sherina, Vikraman will find this news story useful.