BIGG BOSS வரலாறுலயே இப்டி ஒரு ELIMINATION நடந்ததில்ல.. பரபரப்பை ஏற்படுத்திய கடைசி நேர ட்விஸ்ட்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | தளபதி விஜய் கூட ஒரு படம்..? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் வைரல் பதில்.!

விறுவிறுப்பு நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களும் இதனை அதிகம் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக ஜிபி முத்து வெளியேறி இருந்தார். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஜிபி முத்து இந்த முடிவை எடுத்து தானாக வெளியே போனார்.

இதனைத் தொடர்ந்து, சாந்தியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தொடர்ந்து அடுத்த வாரத்தில் அசல் கோலார் வெளியேறி இருந்தார். இதன் பின்னர், சமீபத்தில் நடந்து முடிந்த எபிசோடில் போட்டியாளர் ஷெரினா எலிமினேட் ஆகி இருந்தார். இந்த நிலையில், ஷெரினா எலிமினேட் செய்யப்பட்ட போது அவரது பெயர் குறித்த Elimination Card இருந்த விதம், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என சில விதிமுறைகளும் அளிக்கப்படும். மைக்கை பாத்ரூம் செல்லும் நேரங்களில் கழற்ற கூடாது, வன்முறையில் ஈடுபடக் கூடாது என பல விதிகளை பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் பின்பற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆவதால் தமிழை தவிர வேறு மொழியில் போட்டியாளர்கள் உரையாடக் கூடாது.

ஆனால், நடப்பு சீசனில் ஷெரினா மற்றும் ஆயிஷா ஆகியோர், சில சமயங்களில் மலையாள மொழிகளில் மாறி மாறி பேசி இருந்தனர். இதனை பிக்பாஸும் எச்சரித்திருந்தார். தொடர்ந்து, கமல்ஹாசன் கூட கடந்த வாரம் வேறு மொழிகள் பேசுவது பற்றி எச்சரிக்கை ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, இந்த வார இறுதியில் பத்திரிகையாளர் ஒரு நபரும், அவரது கேள்விக்கு பதிலளிக்க ஒரு நபரும் என இரண்டு பேராக பிக்பாஸ் பிரிந்திருந்தது. இதில், ADK கேள்வி கேட்க அதற்கு ஷெரினா பதில் சொல்ல வேண்டும். இதில், மலையாளத்தில் அடிக்கடி ஷெரினா பேசுவது குறித்து கேள்வி ஒன்றை ADK எழுப்பி இருந்தார்.

அப்படி ஒரு சூழலில், ஷெரினா எலிமினேட் செய்யப்பட்ட போது, அதற்கான கார்டை காண்பித்த கமல்ஹாசன், அதில் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் இருப்பதை காட்டினார். இதன் பின்னர், மீண்டும் ஷெரினாவின் பெயர் தமிழில் எழுதப்பட்டிருக்கும் கார்டை கமல்ஹாசன் காண்பித்தார். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வேறு மொழியில் Elimination அட்டை காட்டப்டுவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "அவளை மறக்கத் தான்".. ஆதித்த கரிகாலனாக மாறி Dialogue பேசிய சிறுவன்.. விக்ரம் பகிர்ந்த Cute வீடியோ..

தொடர்புடைய இணைப்புகள்

Sherina gets different elimination card in biggboss for first time

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Elimination, Sherina will find this news story useful.