பிக்பாசில் இருந்து வந்ததும் GP முத்துவை சந்தித்த குயின்சி.. கூட யார் இருக்காங்கன்னு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக்டாக் மூலமாக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் GP முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்றே சொல்ல வேண்டும். யூடியூப் பக்கத்திலும் வீடியோ போட்டுவரும் முத்து, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6-ல் பங்கேற்றார்.

Advertising
>
Advertising

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்..!

GP முத்துவின் வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் பிக்பாஸ் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்லவேண்டும். பிக்பாஸ் வீட்டில் அவர் செய்யும் குறும்புத்தனங்கள் மற்றும் செயல்பாடுகள் மக்களிடையே பேசுபொருளாகேவ மாறின. மேலும், அவரது வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியும் வந்தன. இதனையடுத்து, தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என கவலை தெரிவித்துவந்த முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அண்மையில் குயின்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடைசியாக நடந்த டபுள் எவிக்ஷனில் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பிக்பாசில் இருந்து வெளியேறிய குயின்சி, GP முத்துவை சந்தித்திருக்கிறார். அப்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷெரினாவும் உடனிருந்தார். இருவரும் GP முத்து மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்திருக்கின்றனர்.

முன்னதாக குயின்சி, ராபர்ட் மாஸ்டரை சந்திருந்த நிலையில், தற்போது GP முத்துவை சந்திருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "சிங்கிளாக வரும் சிங்கம்"..சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்.. ஹர்பஜன் சிங்கின் மாஸான ட்வீட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Sherina and Queency Met GP Muthu and his Family BiggBoss6

People looking for online information on Bigg Boss Tamil 6, BiggBoss6, GP MUTHU, Queency, Sherina, Vijay tv will find this news story useful.