"பொம்மதான் நடிச்சுதா?".. "தப்பா பேசாதீங்க.. நடந்தது இதான்!".. கடுப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களில், கடைசி சகோதரரான கண்ணன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மற்ற சகோதரர்கள் அதிருப்தி அடைய, கண்ணன் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

இந்த துக்கத்தில் சில நாட்கள் மனம் வருந்தி இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் தாயார் லட்சுமி அம்மாள் அண்மையில் உயிரிழப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சீரியலில் லட்சுமி அம்மாளாக நடித்து வந்தவர் ஷீலா. நடிகை ஷீலா வேறு யாருமல்ல பிரபல நடிகர் விக்ராந்தின் தாயார் மற்றும் தளபதி விஜய்யின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ராந்தின் திருமண புகைப்படத் தொகுப்பில் ஷீலா மற்றும் விஜய்யின் குடும்பத்தினர் பங்கேற்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த லட்சுமி கதாப்பாத்திரம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த நடிகைகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர்.

அண்மையில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த நிலையில் பின்னர் சாய் காயத்ரி மாற்றப்பட்டார். தற்போது மீண்டும் விஜே தீபிகா இந்த சீரியலுக்குள் எண்ட்ரி கொடுப்பாரா? என்கிற பேச்சிகள் எழுந்திருக்கின்றன. இதனிடையே லட்சுமி கேரக்டரில் நடித்து வந்த ஷீலா, இறப்பு காட்சிகளில் நடித்து முடிந்த பிறகு அவருக்கு படக்குழுவினர் சுற்றி போட்டு சில பரிகாரச் சடங்குகளையும் செய்தனர்.

சினிமாவில் இப்படி இறப்பு காட்சிகளில் நடிக்கும்போது, அவர்களுக்கு எவ்வித தீங்கும் வராமல் இருப்பதற்காக சென்டிமென்டாக, இப்படியான சடங்குகளை செய்வது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் இந்த காட்சிகளின் போது ஷீலா, பாடையில் படுத்து இருந்த போதும், பிறகு சுடுகாட்டிலும் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவணன், தாயை காண கடைசி நிமிடத்தில் வந்து அழுது நடித்த காட்சிகள் மிகவும் உருக்கமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்ததுடன், இந்த சீரியலில் தாயார் இறந்தவுடன் மொட்டை அடிப்பது போல் வரும் காட்சிகளிலும் உண்மையாகவே மொட்டையடித்துக் கொண்டு கண்ணன் கேரக்டரில் சரவணன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஷீலா நடித்த சில இறப்பு காட்சிகளில் ஷீலாவுக்கு டூப்பாக பொம்மை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தயார் செய்யப்பட்டதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை ஹேமா முன்னதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பலரும், “அப்படியானால் இந்த இறப்பு காட்சிகளில் முழுவதுமாக ஷீலா நடிக்கவில்லையா? பொம்மைதான் நடித்ததா?” என்று பேசி வந்தனர்.

இதற்கு கடுப்பான ஹேமா, “ஒரு கலைஞரின் உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம். இப்படி எல்லாம் தப்பாக பேசாதீர்கள்! ஷீலா தான் பெரும்பாலும் நடித்திருக்கிறார். அனைத்து காட்சிகளிலும் அவரே நடித்தார். பொம்மை ஒரு சில இடங்களில் பயன்படுத்தலாம் என்று மட்டுமே எடுத்து வரப்பட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த காட்சிகளில் அவரே நடித்ததால்தான் அவருக்கு சீரியல் ஷூட்டிங் குழுவினரால் திருஷ்டி பரிகாரங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று ரசிகர்கள் ஒருபுறம் குறிப்பிட்டிருக்கின்றனர். இப்படி கடந்த ஓரிரு வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Also Read: 60S Kids-ன் ஜேம்ஸ் பாண்ட்.. தென்னிந்திய cowboy.. ஜெய்ஷங்கரின் மகன்.. 'பாக்கியலட்சுமி' சீரியலில் எண்ட்ரி!

தொடர்புடைய இணைப்புகள்

Sheela only performed pandian stores hema explanation

People looking for online information on Pandian stores deepikavj deepika pandian storesvj deepikapandian stores vj deepikavj deepika short filmvj deepika reelsvj deepika and saravanan interviewvj deepika channelvj deepika youtube channelvj deepika interviewpandianstoresvj deepika without m, Pandian stores sheela, VijayTelevision, Vijaytv, Vijaytv serial will find this news story useful.