நடிகர் ஷாருக் கான் தனது ரசிகர் ஒருவருக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பான அவருடைய பதிவு வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | நடிகர் கருணாஸ் மகள் டயானா திருமணம்.. மணமக்கள் PHOTO-வை வெளியிட்டு வாழ்த்திய கென்!
பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஷாருக் கான். கடந்த சில வருடங்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த ஷாருக் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகியது. வருடக்கணக்கில் காத்திருந்த ஷாருக் ரசிகர்களுக்கு இந்த படம் பட்டாசான ட்ரீட்டாகவே அமைந்துள்ளது. படம் வெளியாகி முதல் 5 நாளில் 543 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நேற்று நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அவ்வப்போது #askSRK எனும் ஹேஷ்டாக் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரகர்களிடம் பல்வேறு கருத்துக்களை ஷாருக் கான் பகிர்ந்துகொண்டார்.
அப்போது ரசிகர் ஒருவர் பதான் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றின் ஓவியத்தை பகிர்ந்திருந்தார். அதில்,"உங்களுக்காக தான் ஷாருக். இது எப்படி இருக்கிறது?" என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்த ஷாருக் கான்,"மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | VIDEO: "வாத்தி.. தனுஷ் Fans & பொதுவான ரசிகர்களுக்கு எப்படி இருக்கும்?" சம்யுக்தா மேனன் EXCLUSIVE பதில்!