சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கேள்வி.. ஒரே வார்த்தையில் பதிலளித்த ஷாருக்கான்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Advertising
>
Advertising

நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். நடிகர் ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

அட்லியின் இயக்கத்தில் ஜவான் படமும் ஜூன் 2 ஆம் தேதி வெளிவரவுள்ளது. ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கிறார். 

2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி ஷாருக்கான் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி கூறுங்கள்" என‌ ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஷாருக்கான் "Bossman" என ஒரே வார்த்தையில் நச் என்று பதில் அளித்தார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Sharukh Khan Answered about Super Star Rajinikanth

People looking for online information on Rajinikanth, Shahrukh Khan, Superstar will find this news story useful.