‘'தல மட்டுமில்ல யாரா இருந்தாலும்...'' - நேர்கொண்ட பார்வை குறித்து பிரபல ஹீரோ கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா  இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,  என்ன சொல்றதுனு தெரியல. சத்யம் திரையரங்கில் எனக்கு அடுத்ததாக ஒருவர் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தல அல்லது எந்த ஸ்டாரானாலும், இதனை வரவேற்கக்கூடாது. ஒரு சினிமா டிக்கெட் வாழ்க்கையை விட உயர்வானதா? போலீஸ் அவரை கைது செய்தனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Shanthanu Tweets about Thala Ajith and Yuvan's Nerkonda Paarvai

People looking for online information on NKP, Shanthanu Bhagyaraj, Thala will find this news story useful.