விஜய்யின் மாஸ்டர் படத்தில் அண்மையில் தோன்றிய ஷாந்தனு சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் தமக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தை நிறைவாகவே பதிவு செய்திருந்தார்.
இதேபோல் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் படத்தின் ஒரு பகுதியினை இயக்கியிருந்த சுதா கொங்காராவின் தங்கம் கதையில் நடித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு இதுவரை காணாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் தமது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் உரையாடல்களுக்கும் செவிசாய்ப்பதுண்டு. அந்த வகையில் தற்போது தளபதி65 படத்தினை பற்றிய ஒரு முக்கிய தகவல் பேசப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்துக்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படம் தளபதி65.
இந்த படத்தின் நாயகியாக அண்மையில் தான் பூஜா ஹெக்டே இணைவதாக அறிவிப்பு வெளியானது. இதனிடையே நயனப்பயிற்சிகாக ஜானி மாஸ்டர் இணைவதாக அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலரும் இதை வரவேற்றதுடன், ஒரு சிலர், “ஷோபி, தினேஷ், ஸ்ரீதர், சதிஷ், ஷெரிஃப் , ராஜூ சுந்தரம்” மாஸ்டர்களையே பார்த்து போரடித்ததாலோ?” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதில் கொடுத்து தன் கருத்தை பதிவு செய்துள்ள ஷாந்தனு, “மேற்கண்ட மாஸ்டர்களின் நடனத்தை பார்த்து நிச்சயம் நாம் பல வருடங்களாகவே என்ஜாய் தான் பண்ணியிருக்கிறோம். ஆதலால் இப்போது ஜானி மாஸ்டர் மட்டுமே மிகவும் திறமையானவர் என்றல்ல. அவரையும் என்கரேஜ் செய்வோம். அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடவில்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்.