நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு. அண்மையில் பாவக்கதைகள் திரைப்படத்தின் தங்கம் எனும் ஒரு கதையில் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த படமும் நல்ல அங்கீகாரத்தை பெற்றுவந்தது. நெட்பிளிக்ஸில் வெளியான அந்த படத்துக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தன. இதைத் தவிர தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் சாந்தனு நடித்திருந்தார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு ரசிகர்களின் கேள்விகளுக்கு இயன்றவரை பதில் அளிக்கும் பழக்கம் உடையவர். ரசிகர்கள் பலருக்கும் அதனாலேயே சாந்தனுவை பிடித்துப் போனது.
இதனிடையே பாய்ஸ்,களவாணி, சுப்ரமணியபுரம், காதல் போன்ற வெற்றிபெற்ற திரைப்பட வாய்ப்புகள் சாந்தனுவுக்கு முதலில் வந்ததாகவும், ஆனால் அந்த படங்களை சாந்தனு நிராகரித்துவிட்டதாகவும் சிலர் சோஷியல் மீடியாக்கள் கூறிவருவதையும் அதை பற்றி சாந்தனுவிடம் கேட்டுவரும் ரசிகர்களின் பதிவுகளையும் அறிந்த சாந்தனு இதற்கு விளக்கமளித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதில் இந்த படங்களை தான் உண்மையில் நிராகரிக்கவில்லை என்றும், வெவ்வேறு சூழ்நிலை மற்றும் காரணங்களால், அந்த பட வாய்ப்புகளை தான் மிஸ் பண்ணிவிட்டதாகவும் குறிப்பிட்டதுடன், ‘முகாந்திரமில்லாத வதந்தைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படி பொய்யான தகவல்களை பரப்புவதற்கு பதிலாக சரியான தகவலை பரப்பலாமே?’என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: 'உண்மையிலயே பட்டாஸ் தான்!'.. குக் வித் கோமாளி அஷ்வின் நடித்த மியூசிக்கல் வீடியோ ஆல்பம்!