18+! ADULTS ONLY..! இன்னும் நான்கு நாள் தான்.. முருங்கைகாய் சிப்ஸ்சின் ரகசியம் அறிய... வெளியான MASS UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு, அதுல்யா ரவி இணைந்து, இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ், ஊர்வசி இணைந்து நடித்தனர். அந்த படத்தில்தான் முருங்கைக்காய் பற்றிய சமாச்சாரங்களை இயக்குனர் பாக்யராஜ் அறிமுகப்படுத்தி இருப்பார். அந்த சமாச்சாரங்களை அடிப்படையாக வைத்து கிட்டத்தட்ட ஸ்பின் ஆப் போல இயக்குனர் ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ரவிந்திர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மதுமிதா, முனிஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, தயாரிப்பாளர் ரவிந்திர் சந்திரசேகர் என பலர் நடித்திருக்கும் இந்தப் படம் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர், பாடல்கள், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இந்த படம் இன்று சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த படத்திற்கு 'A' சான்றுதழை CBFC கொடுத்துள்ளது, மேலும் இந்த படம் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Shanthanu Athulya Murungaikai Chips Movie Censored A Certificate

People looking for online information on Athulya Ravi, Murungaikai Chips, Shanthanu will find this news story useful.