ஷங்கரின் இன்டியன் 2 பிரமாண்ட படப்பிடிப்பு. செகன்ட் ஷெட்யூளுக்கு ரெடியான சேனாபதி கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1996-ல் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'இந்தியன்'. அப்பா, மகன் என இருவேறு தோற்றங்களில் கமல் இப்படத்தில் நடித்திருந்தார். அநியாயங்களை எதிர்த்து நிற்கும் முதியவராக (இந்தியன் தாத்தாவாக) கமல் இப்படத்தில் நடித்திருந்தது காலம் கடந்து நிற்கிறது. இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்கட்ட ஷூட்டிங் பணிகள் நடைபெற்றது. காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த கமல், இப்போது பக்காவாக தயாராகி இருப்பதால், படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் படப்பிடிப்பு, 35 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கவிருப்பதாகவும், இந்தியன் தாத்தாவாக கமல் தோன்றும் 'சேனாபதி'யின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

செகன்ட் ஷெட்யூலில் இருந்து சேனாபதியின் செகன்ட் இன்னிங்ஸ் ஆரம்பம் தான் !

Shankar to start Kamal Haasan's Indian 2 shooting

People looking for online information on , Indian 2, Kajal Aggarwal, Kamal Haasan, Shankar, Shooting will find this news story useful.