ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'RC15'.. USA & கனடா உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RC15 படத்தின் துவக்க விழா கடந்தாண்டு செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது.

Advertising
>
Advertising

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. 

சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சில நாட்களுக்கு முன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் இணைந்துள்ளார்.

 இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக படக்குழுவினர்  நியுசிலாந்து புறப்பட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த பாடல் உருவாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வட அமெரிக்கா (அமெரிக்கா & கனடா) நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் Shloka Entertainments கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Ram Charan RC15 Movie North America Theatrical Rights

People looking for online information on Canada, Ram Charan, RC15, Shankar, USA will find this news story useful.