இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரபல டோலிவுட் மாஸ் ஹீரோ ராம் சரணுடன் முதல்முறையாக இயக்குநர் ஷங்கர் இணைவதாக அறிவிக்கப்பட்டார்.

தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோரால் ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸின் கீழ் உருவாகும் இந்த படத்தில் தமன் இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு தான், ‘ஷங்கர்- கமலின்’ மெகா ஹிட் தொடர்வரிசை படமான ‘இந்தியன்’ படத்தின், இரண்டாம் பாகமான ‘இந்தியன் -2’ படத்துக்காக கமல்ஹாசனை இயக்கத் தொடங்கினார் ஷங்கர். அதன் பின்னர் அண்மையில் ‘இந்தியன்-2’ பட விவகாரத்தை அடுத்து, எந்த புதிய படத்திலும் பணிபுரியக் கூடாது என்று ஷங்கருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க, உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) ராம்சரணுடன் ஷங்கர் இணைவார் என எதிர்பார்க்கலாம்.
இதுபற்றி தமது சமூக வலைதளத்தில் நடிகர் ராம் சரண், “நேற்று சென்னையில் ஒரு அற்புதமான நாள்.. வரவேற்பளித்ததற்கு ஷங்கர் சார் மற்றும் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. # RC15-ஐ எதிர்நோக்குகிறோம். படம் பற்றிய அப்டேட்கள் மிக விரைவில் வரும்!” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணிபுரியும் எஸ்.எஸ்.தமன், ஷங்கர் இயக்கத்திலான ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த படத்தில் இந்த கூட்டணி இணைவது ஒரு சர்ப்ரைஸ் தான். எஸ்.எஸ்.தமன், தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக அறியப்படும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: சீரியலிலும் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கும் ப்ரியா ராமன்!'.. முதல் சீனே மாஸ் தான்! ப்ரோமோ!