ஷங்கர் இயக்கும் 'இந்தியன் - 2'.. படத்துல நடிகர்கள் யார் யாரெல்லாம் நடிக்கிறாங்க? முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போ? இயக்குனர் ஷங்கர் சொன்ன அதிரடி அப்டேட்!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இதற்கான பிரத்யேக பூஜை சென்னையில் நடந்தது.‌

இதில் இயக்குனர் ஷங்கர், கலை இயக்குனர் முத்து ராஜ், நடிகர்கள் ஜெய் பிரகாஷ், பாபி சிம்ஹா, லைக்கா நிறுவன அதிகாரி தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read | இந்தியன்-2 படத்தில் இணைந்த உதயநிதி ஸ்டாலின்.. புதிய போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Kamal Haasan Indian 2 Movie Cast Details

People looking for online information on Indian 2, Indian 2 Movie Cast Details, Kamal Haasan, Shankar will find this news story useful.