இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.
தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் Game Changer தெலுங்கு படத்தையும் இந்தியன் 2 படத்தினையும் ஒரு சேர இயக்கி வருகிறார்.
மேலும் ஒரு இந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.
இதில் RC15 படத்தில் ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
அதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர், அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.
முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
முந்தைய இந்தியன் 2 ஷூட்டிங் கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் தைவான் சென்றனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைவான் நாட்டின் நகர ரயில் இருப்பு பாதையில் இந்தியன் 2 படத்தின் பெயர் பொறித்த பலூனை பறக்க விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் இயக்குனர் ஷங்கருடன் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மற்றும் கலை இயக்குனர் முத்து ராஜ் இருந்தனர்.