ஷங்கர் - ராம்சரண் இணையும் #RC15 படக்குழு வெளியிட்ட பரபரப்பான அறிக்கை! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜ முந்திரி: ஷங்கர் - ராம் சரண் படமான RC15 படக்குழு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

வலிமை ரிலீஸ் ஆகும் அதே நாளில்.. போனி கபூர் கொடுக்கப்போகும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார்.  ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Rc 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ராம்சரனின் 15வது திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 50வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்து வருகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால் படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "#RC15 #SVC50 படத்தின் ஷூட்டிங் படத்தின் தேவைக்கேற்ப மக்கள் கூட்டத்துடன் கூடிய திறந்தவெளி பகுதிகளில் நடந்து வருகிறது. சட்டத்திற்குப் புறம்பாக எடுக்கப்பட்ட படப்பிடிப்புப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதைத் தவிர்க்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் திருட்டு பைரசி எதிர்ப்பு குழு அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தை பதிவிடும் ஐடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி இசையமைப்பாளர் திடீர் மரணம்.. இந்திய திரையுலகுக்கு பெரும் இழப்பு

தொடர்புடைய இணைப்புகள்

Shankar and Ram Charan RC15 movie makers issue a strong statement

People looking for online information on Kiara Advani, Ramcharan, RC15, Shankar, SVC50 will find this news story useful.