ஷங்கர் & அதிதி ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்.. வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | துணிவைத் தொடர்ந்து அஜித்துடன் 4வது படம்.. என்ன மாதிரியான கதை..?.. H. வினோத் EXCLUSIVE தகவல்..!

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வருகிறார்.

மேலும் ஒரு இந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.  ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.

இதில் RC15 படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி நடித்து வருகிறார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் அவருடைய மனைவி ஈஸ்வரி, மகன் அர்ஜித், மகள் அதிதி ஷங்கர் ஆகியோர் உடன் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Also Read | எம்.ஜி.ஆர் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட நடிகர் விஷால்.. தீயாய் பரவும் வைரல் போட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Aditi Shankar Visits Tirupati Balaji Temple with Family

People looking for online information on Aditi Shankar, Shankar, Shankar Aditi Shankar Visits Tirupati Balaji Temple will find this news story useful.