VIDEO: மார்வெல் ஸ்டூடியோஸின் ஆசிய சூப்பர் ஹீரோ படம் SHANG CHI.. பட்டாசாய் வெளியான டீசர்.. ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆசிய சூப்பர் ஹீரோ படத்தின் புதிய டிரெய்லர் இப்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

உலக அளவில் மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது ஹாலிவுட்டின் இந்த பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் மார்வெல் சினிமாட்டிக் யூனிட்டின் 25வது படமாக, Shang Chi என்கிற பெயரில் பிரம்மாண்ட ஆசிய சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கியுள்ளது.

மார்வெல் Phase 4-ல் இடம் பெற்றுள்ள இந்த படம் குங்பூ கலையை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. அத்துடன் வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் இப்போது வெளியிட ரசிகர்கள் இப்போதை படத்தைக் காண ஆவலாக இருந்து வருகின்றனர்.

இந்திய ரசிகர்கள் பலரும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம் ஆசிய சூப்பர் ஹீரோவை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதுதான். இதன் தொடர்ச்சியாக இந்திய சூப்பர் ஹீரோவை மையமாக வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கும் யோசனை மார்வெல் ஸ்டூடியோவுக்கு இருக்கா? அப்படி இருந்தால் அந்த மேஜிக் எப்போது நிகழும்? என்றும் இந்திய ரசிகர்கள் ஏங்கத் தொடங்கியுள்ளனர்.

ALSO READ: "கடைசியா என் கைலதான் வாங்கி சாப்ட்டாரு" - விவேக் வீட்டு சமையல் பெண்மணி Emotional பேட்டி

தொடர்புடைய இணைப்புகள்

Shang Chi and the Legend of the Ten Rings Teaser Trending

People looking for online information on Asian Super Hero, Marvel Studios, Shang Chi will find this news story useful.