தமிழில் ரிலீஸாகும் ரன்பீர் கபூர் நடிக்கும் PAN INDIA படம்.. வெளியான சூப்பர் போஸ்டர்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர், சஞ்சய் தத் மற்றும் வாணி கபூர் நடிப்பில் அடுத்து வர இருக்கும் புதிய ஆக்‌ஷன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | 'ஜெய்பீம்' வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அடுத்த படம்.. வெளியான EXCLUSIVE அப்டேட்!

கொள்ளையர்கள் மற்றும் காவல்துறையினரின் மோதலை அடிப்படையாகக் கொண்ட அதன் முதல் முன்னோட்ட காட்சிகள் நேற்று வெளியாகி உள்ளன. சஞ்சய் தத் ஒரு ஊழல் மிகுந்த மிருகத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரை எதிர்கொள்ளும் ஒரு கொள்ளையனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

டீஸர் வீடியோவைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது.  இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அடர்ந்த தாடியுடன் கையில் ஆயுதம் தாங்கிய வண்ணம் ரன்பீர் கபூர் காட்சியளிக்கிறார். அதேபோல் வாணி கபூர் தங்க நிற பின்னணியில் சிவப்பு நிற உடையில் கையில் தங்க பம்பரம் ஏந்தி காட்சியளிக்கிறார். சஞ்சய் தத், கையில் சாட்டையுடன் நெற்றியில் பட்டை மற்றும் குங்குமம் வைத்து ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

நாளை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

இப்படம் ஒரு பீரியட் ஆக்‌ஷன் டிராமா படமாக உருவாக்கப்பட்டுள்ளது, இதில் ரன்பீர் இரட்டை வேடத்தில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அசுதோஷ் ராணா, சௌரப் சுக்லா, ரோனித் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஷாம்ஷேராவின் கதை கற்பனையான நகரமான காசாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, ஷம்ஷேரா திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. IMAX வடிவிலும் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "Rocketry: The Nambi Effect" பணம் வாங்காமல் கேமியோ ரோலில் நடித்த சூர்யா-ஷாருக்கான்.. மனம் திறந்த மாதவன்!

தொடர்புடைய இணைப்புகள்

Shamshera Ranbir Kapoor Vaani Kapoor Sanjay Dutt Posters OUT

People looking for online information on Ranbir Kapoor, Sanjay Dutt, Shamshera movie, Vaani Kapoor will find this news story useful.