வீட்ல விசேஷம்!! வளைகாப்பு குறித்து பிரபல நடிகை நெகிழ்ச்சி பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூர்ணா, தனது வளைகாப்பு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

                              Image Credit : shamnakasim Instagram

Also Read | "விஜய் & லோகேஷ்.. தளபதி 67 படம் இந்தியாலயே".. வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி EXCLUSIVE!

பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.  ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.

அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Image Credit : shamnakasim Instagram

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் பூர்ணா நடித்துள்ளார்.

தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா.

Image Credit : shamnakasim Instagram

கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார்.

Image Credit : shamnakasim Instagram

தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.

கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

Image Credit : shamnakasim Instagram

மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தமது வளைகாப்பு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூர்ணா பகிர்ந்துள்ளார்.

Image Credit : shamnakasim Instagram

அந்த பதிவில், "என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். என் குழந்தைக்கும் எனக்கும் நீங்கள் அளித்த ஆசிர்வாதத்திற்கும்  வாழ்த்துக்களுக்கும் நன்றி". என பூர்ணா பதிவிட்டுள்ளார். மேலும் வளைகாப்பு புகைப்படங்களையும் பூர்ணா வெளியிட்டுள்ளார்.

Also Read | பிரபல சீரியலில் மனைவியுடன் சினேகன் .. கூடவே Bigg Boss ஷிவின்.. வைரல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

தொடர்புடைய இணைப்புகள்

Shamna Kasim Purnaa Baby Shower Function Photos

People looking for online information on Poorna, Poorna Baby Shower Function, Shamna Kasim, Shamna Kasim Baby Shower Function will find this news story useful.