VIDEO: இயக்குனர் தாய் செல்வம் மறைவு.. கதறி அழுத நடிகர்கள் செந்தில், ஷமிதா & ரேகா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் & சினிமா இயக்குனர் தாய் செல்வம் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Shamita Rekha Nair Senthil Crying in Director Thai Selvam Funeral
Advertising
>
Advertising

கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் 3-ம் விதி’ படத்தை இயக்கியவர் தாய் செல்வம். இந்த படத்திற்கு முன் காத்து கருப்பு என்ற சீரியலை இயக்கி இருந்தார்.

Shamita Rekha Nair Senthil Crying in Director Thai Selvam Funeral

பின்னர் பல சின்னத்திரை சீரியல்களையும் தாய் செல்வம் இயக்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான, காத்து கருப்பு, மௌனராகம் சீசன்-1, நாம் இருவர் நமக்கு இருவர், தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், பொன்னூஞ்சல், தற்போது ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2  உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர்.

இந்நிலையில் தாய் செல்வம் இன்று காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தாய் செல்வம் உடலுக்கு நடிகர்கள் செந்தில், பவித்ரா, ரேகா நாயர், ஷமிதா உள்ளிட்டோர் மாலை சாற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செந்தில், பவித்ரா, ரேகா நாயர், ஷமிதா ஆகியோர் துக்கம் தாளாமல் கதறி அழுத காட்சிகளும், அழுகையை நிறுத்த முடியாமல் தேம்பி தேம்பி இவர்கள் அழுதது  காண்போரை உருக்கமடைய செய்துள்ளது.

VIDEO: இயக்குனர் தாய் செல்வம் மறைவு.. கதறி அழுத நடிகர்கள் செந்தில், ஷமிதா & ரேகா.. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shamita Rekha Nair Senthil Crying in Director Thai Selvam Funeral

People looking for online information on Pavithra, Rekha Nair, Senthil, Shamita, Thai Selvam will find this news story useful.