குட்டி தல ஆத்விக் உடன் அண்ணாத்த படம் பார்த்த ஷாலினி அஜித்!! எந்த தியேட்டர்ல தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் இன்று (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிற்ய்வனம் தயாரித்துள்ளது.  இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கைப்பற்றியது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று (05.1.2021) தல அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி தனது குழந்தை ஆத்விக் அஜித்துடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கின் மெயின் ஸ்கிரீனில் படத்தை கண்டு மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. தல அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை இயக்குனர் சிவா இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shalini AJITH WATCHING ANNAATTHE MOVIE IN Sathiyam Cinemas

People looking for online information on Aadvik Ajith, Annaatthe, Kutty Thala, Rajinikanth, Shalini Ajith will find this news story useful.