PS1: பிரபல தியேட்டரில் பொன்னியின் செல்வன்.. படம் பார்த்த ஷாலினி அஜித் குடும்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தினர் பொன்னியின் செல்வன் படத்தினை தியேட்டரில் கண்டு களித்தனர்.

Advertising
>
Advertising

Also Read | மீண்டும் DNA டெஸ்ட்.. குத்திக்காட்டிய கண்ணம்மா.. உச்சக்கட்ட பிரஸரில் பாரதி! முடிவு என்ன?

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” வெளியானது முதல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 200+ கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் முதல் நாளில் செய்த அதிக வசூலும் (80 கோடி) இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தினை நடிகர் அஜித் குமாரின் குடும்பத்தினர் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் கண்டுகளித்துள்ளனர். நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா & மைத்துனர் ரிச்சர்டு ஆகியோர் படம் பார்த்துள்ளனர். நடிகை ஷாலினியின் தோழிகள் மற்றும் நடிகர் ரிச்சர்ட் நண்பர்கள் உடன் இருந்தனர்.

பொன்னியின் செல்வன்  படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Also Read | கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த ஓடோடி வரும் குடும்பம்.. சோகத்தில் பாக்யா! அடுத்து என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Shalini Ajith Anoushka Watched Ponniyin Selvan Movie in Sathyam Cinemas

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Family watch Ponniyin Selvan Movie, Maniratnam, Ponniyin Selvan 1, Sathyam cinemas will find this news story useful.