VIDEO: "சிவாங்கி திட்டு வாங்கியிருப்பா.. புகழ் செஞ்ச காரியம்.. அஷ்வின் புள்ள".. ஷகிலா ஷேரிங்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சிம்பு பங்கு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கனி டைட்டில் கார்டு வென்றார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் ரன்னராக ஷகிலா மற்றும் அஷ்வின் வென்றனர். இந்நிலையில் ஷகிலா மற்றும் அவரது மகள் மிலா தாராவுடன் மனம் திறந்து அளித்த பிரத்தியேக பேட்டியில் ஷகிலா மற்றும் மிலா பகிர்ந்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இந்த வீடியோவில் காணலாம்.

இதில் ஷகிலா பேசும்போது, “இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் என் வயதுடைய ரசிகர்கள் கூட மம்மி என்று அழைக்கிறார்கள்.  நான் நடித்த மலையாள ஹிட் படம் ஒன்றில் குளிக்குற சீனுக்காக ஒரு குட்டையை காண்பித்தார்கள். செடிகொடிகள் போல அட்டை பூச்சிகள் ஆடிக்கொண்டிருந்தன. நான் மறுத்தேன். ஆனால் அட்டை பூச்சி ஏறாக்கூடாது என புகையிலை, மண்ணெண்ணெய் தடவிக்கொண்டு கண்டிப்பாக நடித்தே ஆகவேண்டும் அப்போது குண்டு உடலை வைத்துக்கொண்டு ஓடினேன். அந்த சம்பவம் கூட குக் வித் கோமாளி முன்னால் ஈஸியாக தெரிந்தது. அவ்ளோ கஷ்டம்.

புகழ் என்னுடன் இருக்கும் ஒரு எபிசோடில் சிரித்தேன். ஆனால் அன்று நான் செம்ம அப்செட்டாக இருந்தேன். சில ரவுண்டில் வாக் ஓவர் பண்ணுவதாய் சொல்லிவிடுவேன். அதற்கு முந்தைய நாள் இரவு வந்த ஒரு போன் காலால் அடுத்த நாள் வாக் ஓவர் செய்துவிட்டு, அந்த பிரச்சனையை சொல்லிவிடலாம் எனும் மைண்ட் செட்டில் தான் போனேன். அப்போது ஆலு பரோட்டா டிஷ்.. 10 நிமிடம் முயற்சி செய்துவிட்டு வாக் ஓவர் பண்ணிவிடலாம் என முடிவு செய்திருந்தேன்.

அப்போது புகழ், ‘அடேய் சூடா இருக்கும்டா’ என சொல்லி முடிப்பதற்குள் சூடாக இருந்த உருளைக்கிழங்கில் கை வைத்துவிட்டு அலற நான் வீடு திரும்பும் வரை அதை நினைத்து சிரித்தேன். ஆனால் நான் சிரித்தது மக்களிடையே இப்படி வைரலாகும் என நினைக்கவே இல்லை நான். இதேபோல் என்னை ஆண்கள் தொட்டால் அவ்ளோதான். எனக்கு பிடிக்கவே பிடிக்காது. புகழ் தான் என்னை அம்மா என சொல்ல ஆரம்பித்தான். ஆனால் நான் குக் வித் கோமாளி செட் உட்பட யாரிடமும் அப்படியான குணங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. என் சாப்பாடை அனைவரும் ரசிச்சு சாப்பிடுவார்கள். கேமரா மேன் வரை சாப்பிட்டு விட்டு அம்மா நல்லாருக்கு என செய்கையாக சொல்வார்கள். அந்த ஷோவில் இருந்த ஆண்கள் அத்தனை சரியானவர்கள்.

சிவாங்கி என்னுடன் பேர் ஆகவில்லை. நான் லக்கியா? அவள் அன்லக்கியா என தெரியவில்லை. சிவாங்கி நல்ல பொண்ணு. ஆனால் குழந்தை, வேலை செய்யவில்லை என்றால் திட்டிவிடுவேன். சுனிதாவை அப்படி திட்டிவிட்டேன். அழுதுவிட்டாள் குழந்தை. சுனிதாவிடம் ஹிந்தியில் திட்டிவிட்டேன். அப்படி திட்டிய பிறகு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே அழ ஆரம்பித்தாள். பின்னர் போய்விட்டாள். பாபா பாஸ்கர் மீண்டும் சுனிதாவை தூக்கிக் கொண்டுவந்து நிறுத்தினார். ஆனால் கோமாளிகள் என்றால் நம்மள விட சீப் எல்லாம் கிடையாது. அவர்கள் நம்மை விட கஷ்டப்பட்டு உழைக்கிறவர்கள். அதை ஃபீல் பண்ணி சாரி சொன்னேன். ஃபினாலேவில் கூட அவள் தான் முதல் ரவுண்டில் எனக்கு பேராக வந்தார்.

சிவாங்கி என்னுடன் பேர் ஆகியிருந்தால் திட்டு தான் வாங்கியிருப்பாள். குக்கிங் நேரத்தில் என்னை தொந்தரவு செய்யக்கூடாது. நான் அந்த நேரத்தில் சீரியஸாக இருப்பேன். ஆனால் அவள் குக் வித் கோமாளியின் லவ். அதனால் அவளை எதுவும் சொல்லிவிடக்கூடாது. பெரியவங்களுக்கு மரியாதை கொடுப்பவள். தெய்வக்குழந்தை. டான்ஸ் எல்லாமே பண்ணுவாள். அவளுடைய அப்பா அம்மா பெருமைப்பட வேண்டும் என கூறினேன். பவித்ரா நான் மலையாளி என நினைத்து மலையாளத்தில் பேசினாள். என் சிறப்பான பொண்ணு அவள். அவளுக்கு பிராக்டிஸ் பண்ண நேரம் இல்லை. நான் சொல்லிக் கொடுத்தேன். அவ்வப்போது அவளது டேபிளில் சென்று நான் செக் பண்ணுவேன். உப்பு அதிகமாகிவிடும். நான் பாத் சார் மாதிரி வாசனையிலேயே உப்பு கூட இருந்தால் சொல்லிவிடுவேன்.

அஷ்வின் மட்டன்., பிரான்லாம் சாப்பிடாமல் இருந்தான். சில பிரச்சனைகளால் மிங்கிள் ஆகாமல் இருந்தான். பிறகு அவனை அனைவருடனும் பழக வைக்க் முயற்சித்தேன். மட்டன், பிரான், பாயா எல்லாம் நான் அவனுக்கு மட்டும் எடுத்து வைத்து கொடுத்து சாப்பிட வைப்பேன். மற்றவர்கள் எல்லாம் அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள். அஷ்வின் கேட்க மாட்டான். நானாக கொண்டு சென்று கொடுப்பேன். அவனும் சாப்பிடுவான். புள்ள மாதிரி அவன். எல்லாருமே என் புள்ளைங்க தான்.

நான் போட்டியாளராக பாபா பாஸ்கரை தான் நினைத்தேன். கனியை நினைக்கவே இல்லை. நான் யார் சமையலையும் பெரிதாக டேஸ்ட் பண்ணியதில்லை. என் சமையலை கூட அப்டிதான். நுகர்வது மட்டும்தான். மீறி சந்தேகம் என்றால் விரலால் எடுத்து டேஸ்ட் பண்ணுவேன். பாபா பாஸ்கர் தான் ரொம்ப கஷ்டப்பட்டு வெறித்தனமான பயிற்சியில் இருந்தார். அஷ்வினும் வித்தியாசமான வெளிநாட்டு டிஷ்களை முயற்சி செய்துகொண்டே இருப்பார். அதனால் அவர்கள் 2 பேரையும் மட்டுமே எதிர்பார்த்தேன். கனியை காரக்குழம்பு கனி என ஏன் சொல்கிறார்கள் என தெரியவே இல்லை. நான் சமைத்த பிறகு பெரிதாக ஷோவை பார்த்ததும் இல்லை.

டேஸ்ட் பண்ணும்போது ரக்‌ஷன் எதாவது சொல்லிவிட்டு திட்டு வாங்குவான். சமைக்கும்போது 2 செஃப் மாஸ்டர்களும் அருகில் வந்து டேஸ்ட் பண்ணாமலே கமெண்ட் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அதை நாம் சரி செய்தாலே சமையல் அருமையாக வந்துவிடும். எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவார்கள். அவர்கள் நிறைய தகவல்கள் சொல்லுவார்கள். லெஜெண்ட்ஸ் இருவரும். அவர்கள் என் உணவை டேஸ்ட் பண்ணியதற்கு இறைவனுக்கு நன்றி. நான் வாழ்வதற்கான அர்த்தம் மிலா.

மிலா பேசும்போது, “மிலா என்றால் வெள்ளை இளவரசி என்று அர்த்தம். ஷகிலா அம்மா என்ன நினைப்பாரோ அதை மனதிற்குள் ஆர்டர் செய்துகொண்டு கரெக்டாக சின்சியராக செய்வார். பிரேக்கில் கூட அதை பற்றி யோசித்துக்கொண்டே தான் இருப்பார். அவரை குக் வித் கோமாளி நண்பர்கள் தொட்டு பேசும்போது நான் பயந்துவிடுவேன். ஏனென்றால் அது அம்மாவுக்கு பிடிக்காது. சிவாங்கி ஒரு தெய்வக்குழந்தை. அம்மா தன் சமையலை கூட டேஸ்ட் பண்ண மாட்டார். அம்மாவை ஒரு சினிமா நடிகையாகவே பார்த்தேன். லிமிட்டாக இருப்பவர். டெலிவிஷனுக்கு வந்த பிறகு தான் இன்னும் இயல்பாக இருக்கத் தொடங்கினார்.” என்று கூறினார்.

VIDEO: "சிவாங்கி திட்டு வாங்கியிருப்பா.. புகழ் செஞ்ச காரியம்.. அஷ்வின் புள்ள".. ஷகிலா ஷேரிங்ஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shakila first ever exclusive after cook with comali season 2 end

People looking for online information on CookWithComali2, Pavithra Lakshmi, Pugazh, Shakila, Silambarasan TR, Sivaangi, Trending, VijayTelevision will find this news story useful.