'அஸ்வினே'... புகைப்படத்துடன் ஷகிலா மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த EMOTIONAL போஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னதாக சில குறும்படங்களில் நடித்த அஸ்வினுக்கு ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே அஸ்வின் - சிவாங்கி ஜோடியின் கலாட்டாவுக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். சிவாங்கியும் அஸ்வினை  ‘அஸ்வினே’ என்று அழைப்பதும் இப்போதும் ட்ரெண்ட் ஆகிவிட்டது.

இதில் குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான மோஸ்ட் பாப்புலர் நபர் (MALE) விருது அஸ்வினுக்கும்,மோஸ்ட் பாப்புலர் நபர் (FEMALE) விருது சிவாங்கிக்கும் மிக அண்மையில்  Behindwoods Gold Icons - டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்பட்டது. இதில் அஸ்வின் கையால் இந்த விருதினைப் பெற்றதை மகிழ்ச்சியுடன் சிவாங்கி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், குக் வித் கோமாளியில் தற்போது பங்கேற்று வரும் ஷகிலாவுடன் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவரது மகள் மிலா அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள மிலா,  “அஸ்வினே.. இன்னொரு அம்மாவின் மூலமாக கிடைத்த சகோதரர்!” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

'அஸ்வினே'... புகைப்படத்துடன் ஷகிலா மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த EMOTIONAL போஸ்ட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shakila daughter Mila Emotional post ashwin Cook with comali

People looking for online information on Ashwin, Cook with comali, Mila, Shakila, Trending, VijayTelevision will find this news story useful.