விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.
அதேபோல் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார். ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்க ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை தாய் மகள் இருவரும் நெகிழ்ச்சியுடன் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்..!