குக் வித் கோமாளியின் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை 'மம்மி' என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார். ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்க ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணிமேகலைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. இந்நிலையில் மணிமேகலைக்கு வீட்டில் சுடுதண்ணி தூக்கும் பொழுது சமீபத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஷகிலா மற்றும் அவரது மகள் மிலா இருவரும் மணிமேகலையை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்துள்ளனர். இதுபற்றிய மணிமேகலை நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "ஷகிலா மம்மி லவ் யூ. நேரம் எடுத்து என்னை வந்து பார்த்ததற்காக நன்றி. மேலும் உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் மிகவும் அன்பானவர். இப்பொழுது சற்று நலமாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.