அட்லி & பிரியாவின் குழந்தை குறித்து நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் Quote ட்வீட் செய்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி, தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார். ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுடன், நயன்தாரா, பிரியா மணி, யோகி பாபு, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இயக்குனர் அட்லி, தனது மனைவி நடிகை பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் செய்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
அட்லி & பிரியா தம்பதியருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான், டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர் அட்லி பிரியா தம்பதியரின் குழந்தையை பார்த்துட்டீங்களா? என கேள்வி எழுப்பினார். இது குறித்து பதில் ட்வீட் செய்த ஷாருக்கான், "ஆம், குழந்தை மிகவும் இனிமையாக இருக்கிறான். இறைவனின் அருளால் ஆரோக்கியமாக இருக்கிறான்" என ஷாருக்கான் கூறியுள்ளார்.